Published On: Thursday, April 07, 2016
Jetwing Jaffna ஹோட்டலை ஜனாதிபதி திறந்து வைத்தார்
யாழ்ப்பாணத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்துள்ள Jetwing Jaffna ஹோட்டலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (03) திறந்து வைத்தார்.
Jetwing ஹோட்டல் குழுமத்திற்குச் சொந்தமான இந்த ஹோட்டல் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 55 அறைகள் உள்ளன.
ஜெட்வின் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் (JYDP) ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 67 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது. இவர்களுக்கான சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் Jetwing ஹோட்டல் குழுமத்தின் தலைவர் ஹிரான் குரே அவர்களும் கலந்து கொண்டனர்.
(படங்கள் : ஜனாதிபதி ஊடகப் பிரிவு)






