எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, May 01, 2016

இம்போட் மிரர் ஊடகவலையமப்பின் 6வது அகவைக் கொண்டாட்டமும், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வும்

Print Friendly and PDF



இலங்கை ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட ‪இம்போட் மிரர் ‬செய்தித்தளம், ‪சிகரம் இணைய_வானொலி‬ போன்ற நிறுவனங்களின் 6வது அகவைக் கொண்டாட்டமும், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை 24.04.2016 ம் திகதி காத்தான்குடி அஷ் ஷஹீட் அகமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் மேற்படி நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் வெகுக் கோலாகலமாக நடந்தேறியது.





முதற்கட்ட நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களும், அதிதிகளாக உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களும் இரண்டாம் கட்ட நிகழ்வுக்கு பிரத அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக், ஆரிப் சம்சுடீன், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் எஸ்.எம்.சபீஸ்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துல்லாஹ், டாக்டர் கே.எல்.எம்.நக்பர், டாக்டர் பறூஸா நக்பர், அகில இலங்க மக்கள் காங்கிரஸின் தலைவரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜூனைடீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






வளவாளர்களாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்டீன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஒலிபரப்பாளரும், அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களும், இலக்கிய விமரசகர்,தமிழ் ஆசிரியர், அலிஷ் நியூஸ் இணையத்தள பணிப்பாளர் ஜெஸ்மி எம்.மூஸா அவர்களும் , கலந்து ஊடகவியலாளர்களுக்கு நல்ல பல சக்தி மிக்க கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தமை சிறப்பாக அமைந்தது.

மேலும், இம்போட் மிரர் நிறுவனத்துக்காக தன்னை உருக்கி உழைத்த உறுப்பினர்களை அதிதிகள் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்ததுடன் பாராட்டியும்,வாழ்த்தியும் உரை நிகழ்தினர். அது மட்டுமல்லாமல் விழாவுக்கு வருகை தந்நிருந்த அதிதிகளை இம்போட் மிரர் நிறுவனம் பொன்னாடை போர்த்தி நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ.சேட் ,வழங்கி அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்திக் கௌரவித்தது.

மேலும், செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து பயிலுனர்களுக்கும், ரீ.சேட், சான்றிதழ்கள் என்பன அதிதிகளால் உவந்தளிக்கப்பட்டு விழா நிகழ்வுகள் பூரணமான மனத்திருப்தியுடன் இனிதே நிறைவுற்றது.

(எம்.ஐ.எம்.நாளீர்,சப்னி)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2