Published On: Friday, May 20, 2016
சாய்ந்தமருது வைத்தியசாலையில் வைத்திய நிபுணரின் சேவை நாளை ஆரம்பம்
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணரின் சேவை நாளை (21)சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின்செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது, மாளிகைக்காடு, வொலிவோரியன் பிரதேச மக்களுக்கு வைத்திய நிபுணர்களின்சேவையினை பெற்றுக்கொடுக்கும் முகமாக சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரிஎம்.எம்.எஸ்.ஜெஸீலுல் இலாஹி உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினர்,கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் ஆகியோரிடம் விடுத்தவேண்டுகோளை ஏற்று இச்சேவையினை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொது வைத்தியநிபுணர்களான ஏ.எம்.ஹபீல், எம்.அஷ்பக் ஆகியோர் தங்களது மருத்துவ சேவையினைமாதத்தின் இரு நாட்கள் சாய்ந்தமருது வைத்தியசாலையில் வழங்க முன்வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மற்றும் மகப்பேற்று வைத்தியநிபுணர்களின் சேவைகளையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
மேலும் இவ்வைத்திய நிபுணர்களின் சேவைகளை நிரந்தரமாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்பொருட்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை ஆதார வைத்தியசாலையாகதரமுயர்த்த முழு நடவடிக்கையினையும் தாம் மேற்கொண்டு வருதாகவும் செயலாளர் றியாத்ஏ.மஜீத் மேலும் தெரிவித்தார்.
வைத்திய நிபுணர்களின் சேவைகளை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில்மேற்கொள்ள முயற்சிகளை எடுத்த மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெஸீலுல்இலாஹி, இச்சேவையினை மக்களுக்கு வழங்க அனுமதி வழங்கிய கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், இச்சேவைக்கான வைத்திய நிபுணர்களைவழங்கிய கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்ஏ.எல்.எப்.றகுமான், இச்சேவையினை எமது வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கு தங்களதுவேலைப்பழுக்களுக்கு மத்தியில் முன்வந்த பொது வைத்திய நிபுணர்களான ஏ.எம்.ஹபீல்,எம்.அஷ்பக் ஆகியோருக்கு எமது சாய்ந்தமருது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
(ஹாசிப் யாஸீன்)
