எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, May 02, 2016

கல்விமீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும் நூல் வெளியீடு

Print Friendly and PDF


அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதி சேமமடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கல்விமீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும் எனும் நூலின் அறிமுக வெளியீட்டு விழா எதிர்வரும் 2016.05.08ஆந்திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00மணிக்கு கொழும்பு தெமடக்கொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் அல் ஹாஜ் சித்தீக் எம். சலீம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.



இந்நிகழ்வில் பிரத அதிதியாக முன்னாள் சுங்கத்தினைக்களத்தின் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான கலாநிதி யு.கே. இஸ்மாயில் கலந்து கொள்வதுடன், பேராசியர்களான சோ.சந்திரசேகரன், மா.கருணாநிதி, பிகாஸ் தனியார் பல்கலைக்கழக நிறுவுனரும் பொறியியலாளருமான அப்துர் றகுமான் வசந்தம் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸர்றப், எழுத்தாரளர் த. மதுசூதனன், கலாபூஷணம் எம்.எஸ். ஸ்ரீதாயளன் ஆகியோரும் இந்நூல் பற்றிய உரையினை ஆற்றவிருக்கின்றனர்.

அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும்; இந்நிகழ்வில் முதல் பிரதியினை வைத்திய கலாநிதி தாஸிம் அகமது பெற்றுக் கொள்கின்றார். ஊடக அனுசரணையினை சுடர் ஒளி பத்திரிகை வழங்கியிருக்கின்றது. அட்டாளைச்சேனை மன்சூர் ஏலவே பல்வேறு நோக்குகளைக் கொண்டமைந்த ஐந்து நூல்களை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2