எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, May 09, 2016

உல்லாச துறை அமைச்சின் இணைப்பாளரா பொத்துவில் அப்துல் றஹீம் நியமனம்...!

Print Friendly and PDF

ல்லாச துறை அமைச்சின் இணைப்பாளராகவும், கிழக்கு மாகாண சுற்றுலா துறை அபிவிருத்தி அமைப்பின் தலைவராக முன்னாள் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும், அறுகம்பே சுற்றுலா துறை அமைப்பின் தலைவரான அல்-ஹாஜ் எம்.எச்.ஏ. அப்துல் றஹீம் நியமிக்கப்பட்டுள்ளார்.



கடந்த 11 வருட காலமாக அறுகம்பே பிரதேசத்தை சுற்றுலா துறையை பிரபல்யப் படுத்துவதிலும் உல்லாச துறை ஹோட்டல்களை அபிவிருத்தி செய்வதிலும் இனம், மதம் பாராது அர்பணிப்புடன் தொண்டாற்றிய பெருமை அல்-ஹாஜ் எம்.எச்.ஏ. அப்துல் றஹீமையே சாரும். இவரது சிறந்த ஊழல் அற்ற சேவைக்காக இங்கிலாந்தில் 2007 ம் ஆண்டு “உலக முதல்தர சுற்றுலா துறை தளம் என்ற விருதும்” கிடைத்தது.


இளம் துடிப்புடன் தொடர்ந்தும் மக்களுக்கு ஆற்றிய தன்னலம் அற்ற சேவைக்காக கடந்த பிரதேச சபை தேர்தலில் பிரதேச உறுபினராக தெரிவு செய்யப்பட்டார் பிரதேச சபையின் ஊடாக ஊழல் அற்ற தன்நலம் அற்ற ஒரு சமுக சேவகனாக செய்யட்பட்டதன் காரணமாக சுகாதார பிரதி அமைச்சின் இணைப்பாளர் பதவியும் இவருக்கு கிடைத்தது. அனைவரும் அறிந்ததே


இந்நிலையில் கிழக்கு மாகாண சுற்றுலா துறை அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் முதலமைச்சர் தலைமையின் அன்மையில் இடம்பெற்றது இதனை தொடர்ந்தும் திருகோணமலை, மட்டக்களப்பு, பாசிக்குடா அம்பாறை , அறுகம்பே ஆகிய சுற்றுலா தளம்களை ஒன்றிணைத்து கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை அபிவிருத்தி அமைப்பு உருவானது அதிலும் ABTA அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் எம்.எச்.ஏ. அப்துல் றஹீம் அவர்களுக்கே இதனது தலைமைத்துவம் கிடைக்க பெற்றது.

இவ்வாறு மக்களுக்காகவும், உல்லாச துறைக்காகவும் முழு முயற்சியுடன் ஈடுபடும் இவரது சேவையை கண்ட உல்லாச துறை அமைசர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்கள் தனது அமைச்சுக்கு இவரை அழைத்து இவரது சேவையை பாராட்டி மகிழ்ந்ததுடன் உல்லாச துறை அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பதவி வழங்கி அதற்கான நியமனப் பத்திரத்தையும் வழங்கி வைத்தார்.

சப்னி

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2