Published On: Friday, August 28, 2015
“நிர்மாணத்துறை 2015” - கண்காட்சி ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை நிர்மாணத்துறை சங்கத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) காலை ஆரம்பமான “நிர்மாணத்துறை 2015” கண்காட்சியினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இச்சந்தர்ப்பத்தின்போது அமைச்சுக்களின் செயலாளர்கள், நிர்மாண சங்கத்தின் தலைவர் தேசமானிய எஸ்.டி.லியனாராச்சி செயலாளர் புபுது கமல் பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
Sudath Silva
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)