Published On: Friday, August 28, 2015
இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் அம்பாறை மாவட்டதிற்கான பிரச்சார செயற்குழு அங்குரார்ப்பணம்
இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் அம்பாறை மாவட்டதிற்கான பிரச்சார செயற்குழுவின் அங்குரார்ப்பண கூட்டம் 2015-08-27 அன்று அக்கரைபற்றில் நடைபெற்றது.
இங்கு செயற்குழு நிர்வாகமும் அங்குரார்ப்பணம் செயப்பட்டது. இதில் பிராந்தியத்தில் இருகின்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டது குறுப்பிடத்தக்கது. இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் முதுமாணி ரகீப் ஜாபர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமது அமைப்பின் நோக்கத்தையும், புலம்பெயர் மக்கள் ஒரு குடையின்கீழ் ஒன்று படுவதன் அவசியம் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது. மேலும் அவர் உரையாற்றுகையில் " புலம்பெயர் மக்கள் என்பது இலங்கை பிரஜா உரிமையுள்ள வெளிநாட்டில் வசிக்கும் அனைவரையும் குறிக்கும், இதில் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கிற்கு சென்றுள்ள தொழிலாளர்களும், மேற்கத்தைய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் உள்ளடங்குவர்.
இலங்கையின் பொருளாதார உயிர் நாடியான இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவேண்டுமாயின்இ 20 லட்சம் புலம்பெயர் மக்களும் அவர்களுடைய உள்ளூர் உறவுகளும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டும். மேலும் காலப்போக்கில் ஒற்றுமையாக ஒரு தேர்தலை எதிர்கொண்டு தனக்கு பொருத்தமான அரசியல் பிரதிநிதிகளை தாமே உருவாக்கி கொள்கின்ற ஒரு அரசியல் பொறிமுறைய உண்டுபண்ணலாம். அவ்வாறு ஒவ்வொரு மட்டத்திலும் புலம்பெயர் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் உருவாக்கம் பெற்று , ஒரு பேரம் பேசும் சக்தியாக மற்றும் புலம் பெயர் சமூகத்திற்கு குரல் கொடுக்கும் தனித்துவமிக்க சக்தியாக உருவாகலாம். எனவே இந்த செய்தியை அரசியல் பலவீனமுள்ள இந்த சமூகத்திற்கும் அவரகளின் உறவுகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது சமூக சிந்தனையுள்ள நம் அனைவருக்கும் கடமையாகும்" என்று கூறினார்.
இதைதொடர்ந்து பிரதேச ரீதியான அமைப்பாளர்கள் நியமனமும் , கேள்வி பதிலும் இடம்பெற்றது.
-எம்.வை.அமீர் -