எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, August 24, 2015

சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டால் எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பது இலங்கை தேர்தலில் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அது இந்தியர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும்

Print Friendly and PDF

சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டால் எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பது இலங்கை தேர்தலில் நிரூபிக் கப்பட்டிருந்தாலும் அது இந்தியர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும்  என்றும் குறிப்பிட்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், என்றும் குறிப்பிட்டார். 

திருநெல்வேலி மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் தென்காசி வி.டி. எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணை யத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் பேரியக்கமாக செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை நடை பெற்று பிரைமரிகள் அமைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் 30 வருவாய் மாவட்டங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாக வசதிக்காக 52 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மாவட்டங் களுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று முடிவடைந்து விட்டது. மீதமுள்ள ஓரிரு மாவட்டங்களில் தேர்தல் கள் முடிவடைந்ததற்கு பிறகு மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழு கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 6, 7 ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் சென்னையில் தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் எம்.பி., தலைமை யில் நடைபெறுகிறது. தேசிய பொருளாளர் கேரள அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டி உட்பட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள், தேசிய செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

25 கோடி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் இந்த ஆட்சியால் ஓரம் கட் டப்படுகின்றனர். எனவே, பா.ஜ..க தலைமையில் சங்பரிவார் அணி இருப்பதை போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சியில் இன்ஸானியத் (மனிதாபிமான) அணி தேசிய அளவில் அமைக்கப்பட்டு, மதச்சார் பற்ற சக்திகள் சங்பரிவார் அணிக்கு எதிராக ஒருங் கிணைக்கப் படும் முயற்சி நடைபெறும். இதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவின் பிரதான நோக்கமாகும். கல்வித் துறையில் மாற் றங்கள் கொண்டு வந்து இந்துத்துவம் திணிக்கப்படு கிறது. இந்தி மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை பொருத்தி மற்ற மொழி களை ஊனப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மிகப் பெரும் முயற்சி மேற்கொண்டிருக் கிறது.இதில் சிறுபான்மை மொழி பேசுவோர் உரிய கவனத்தை செலுத்தா விட்டால் மிகப் பெரும் இழப்புகளை சந்திக்க நேரும். 

இலங்கைத் தேர்தல் நமது அண்டை நாடான இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஐக்கய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. இந்த தேர்தலில் மகிழ்ச்சி யான ஒரு செய்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கைப்பற்றியுள் ளது. இதிலிருந்து தமிழ் மக்கள் அங்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடித்தால் அரசி யல் சட்டத் திருத்தம் உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளில் தமிழர்கள் வெற்றி காண முடியும்.இலங்கை நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் சிறுபான்மை முஸ்லிம்களும் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விகிதாச்சார அடிப்படையில் அக் கட்சிக்கு மேலும் 2 இடங்கள் கிடைக்கும்.சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டால் எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பது இலங்கை தேர்தலில் நிரூபிக் கப்பட்டிருந்தாலும் அது இந்தியர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும்.தமிழக நிலவரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமீப காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் மன வேதனையையும், அதிர்ச்சியை யும், ஆரோக் கியமற்ற தன்மையை உருவாக்கக் கூடியதாகவும் அமைந்து வருகிறது.

மதுவிலக்கை தமிழ் நாட்டில் மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மிக பலமாக எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. இதற்கான போராட்ட களத்தில் மாண வர்கள் மட்டுமின்றி மகளிரும் இறங்கியுள்ளனர்.. எனவே, அ.இ.அ.தி.மு.க. அரசு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கை கொண்டு வரும் அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என்பது எங்களது விருப்ப மாகும். அவர் அப்படி அறி வித்தால் அதனை நாங்கள் வரவேற்று மகிழ்வோம்.
மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித் துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம் - நம்பு கிறோம். அந்த கோரிக்கை நிறைவேற நாங்கள் எல்லா வகையான நெருக்குதல் களையும் கொடுப்போம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

பேட்டியின் போது, மாநிலப்பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்,  மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் வி.டி. எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், நெல்லை மேற்கு மாவட்ட கவுரவத் தலைவர் தென்காசி எம்.எஸ். துராப்சா, மாவட்டத் தலைவர் புளியங்குடி எஸ். செய்யது சுலைமான், செய லாளர் கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், பொரு ளாளர் பாம்புக்கோவில் சந்தை வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

(திருச்சி - சாகுல் ஹமீது)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2