Published On: Monday, August 24, 2015
அயோத்தியில் ராமர்கோயில் சீரமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததைக் கண்டித்து விமான நிலையம் முற்றுகைப் போராட்டம்
அயோத்தியில் ராமர்கோயில் சீரமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததைக் கண்டித்து போராட்டம் மேற்கொண்ட இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பைச் சேர்ந்த 36 பேரை போலீஸார் கைது செய்தனர.
அயோத்தியில் ராமர் கோயிலை சீரமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பில், திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் தலைமை வகித்தார். போராட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கமிட்டவாறே போராட்டக்காரர்கள் விமான நிலையத்துககுள் நுழைய முயன்றனர். இதனையடுத்து அனைவரையும் விமான நிலைய போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 36 பேரும் செம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவளாகத்தில் தங்க வைக்கப்பட்டு அதன்பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர்.