எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, August 28, 2015

அவள் ஹிஜாப் அவளின் உரிமை , நான் நோன்பிருக்கேன், புறம், பாஸ்...பாஸ் குறும்படங்கள் தொடக்கவிழா

Print Friendly and PDF

ஆர்ட் ஆஃப் பீஸ் பவுன்டேஷன் சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா -2015 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரைசுல் இஸ்லாம் இயக்கிய கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், ஹீசைன் பாஷா - ஷாமிலா பாத்திமா எழுதிய உணா்வாய் உன்னை புத்தக வெளியீடு,புத்தாநத்தம்  காஜாமைதீன் அஹ்சனி இயக்கிய அவள் (ஹிஜாப் அவளின் உரிமை) குறும்படம் வெளியீடு, திருச்சி மாவட்டம் புத்தாநத்ததை சார்ந்த ஆயிஷா கனி அபுபக்கருக்கு இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கல் மற்றும் காஜாமைதீன் அஹ்சனி இயக்கத்தில் வெளிவர இருக்கும் நான் நோன்பிருக்கேன், புறம், பாஸ்...பாஸ்... ஆகிய புதிய மூன்று குறும்படங்கள் தொடக்கவிழா நடந்நது. 




இந்த விழாவிற்கு முனைவா் பேரா. ஹாஜா கனி அவா்கள் தலைமை வகிக்க, ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ஹூஸைன் பாஷா  விழாவைத் துவக்கிவைத்து அறிமுகவுரையாற்றினார். அனைவரையும் ஷாமிலா பாத்திமா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், தினமணி பத்திரிரையின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமுமுக-வின் தலைவர் மௌலவி ஜெ.எஸ்.ரிபாயி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் சிக்கந்தர், செய்தியாளர் மனோபாரதி, கல்கி பிரியன், இமயம் டிவியின் சுஃப்யான் ஆகியோர் மற்றும் 200க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.விழாவிற்கான ஒருங்கிணைப்பை குறும்பட இயக்குனர் காஜாமைதீன் அஹ்சனி தலைமையிலான குழுவினருடன், மீடியா 7, ஆர்.எஸ்.டி வீடியோஸ், ஷா ஸ்டுடியாஸ், யுனிவர்சல் சிண்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப்ஸ் நிறுவனத்தினர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இறுதியில் பொறியாளர் முஹம்மது ஹனிபா நன்றியுரையாற்றினார்.

(திருச்சி - சாகுல் ஹமீட்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2