Published On: Monday, August 24, 2015
புதிய அரசின் அமைச்சர்களாக மூவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மூன்று அமைச்சர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர அவர்களும் நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷ அவர்களும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
( Phழவழ டீல : சுதத் சில்வா )