Published On: Monday, August 24, 2015
தேசிய பட்டியலில் முஸ்லிம்களை UNP புறக்கணிக்கவில்லை...! நாம் களமிறக்கிய முக்கியஸ்தர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர்...
ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலில் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபை தலைவரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முகாமையாளரும் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளவருமான ஹிதாயத் சத்தார் அவர்கள் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துவெளியிட்டார்
இம்முறை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கிய முஸ்லிம்களில் பெரும் பாலானோர் வெற்றிவாகை சூடியுள்ளார்கள்.கேகாலையில் எமது கட்சி செயலாளர் கபீர் கசீம் கொழும்பில் மரிக்கார் முஜீப் கண்டியில் முன்னாள் அமைச்சர் ஹலீம் திருகோணமலையில் இம்ரான் என ஐக்கிய தேசிய கட்சி நேரடியாக களமிரங்கிய முஸ்லிம்கள் பலர் தெளிவான வெற்றிகளை பெற்றுள்ளனர் .
துரதிஷ்டவசமாக ஒரு சிலர் வெற்றிபெறவில்லை ஆனால் சுதந்திர கட்சியில் முஸ்லிம்கள் ( வன்னியில் மஸ்தானை தவிர) எவரும் வெற்றிபெறவில்லை என்பதை மட்டும் கருதி சுதந்திர கட்சி தேசிய பட்டியல் வழங்கவில்லை முன்னாள்அமைச்சர் பவுசி ஒரு மூத்த சுதந்திர கட்சி காரர் இபைசர் முஸ்தபா ஒரு சட்ட வல்லுநர் ஜனதிபதியின் சட்ட ஆலோசகர் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாஹ் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் போன்ற காரணங்களுக்காக குறித்த மூவருக்கும் தேசிய பட்டியலை சுதந்திர கட்சி வழங்கியிருக்கலாம்.
ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் முஸ்லிம்களை அரவணைக்கும் கட்சி முஸ்லிம்களும் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பவர்கள் அமையவுள்ள அரசாங்கத்தில் கபீர் ஹசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் பலமான அமைச்சுக்களை வகிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை தொடர்ந்தும் கபீர் ஹசீம் அவர்களே கட்சியின் பொது செயலாளர் இதுதான் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களுக்கு அளித்துள்ள கவுரவம் என குறிப்பிட்டார்.
ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க்கப்படாதது தொடர்ப்பில் அதிருப்தி வெளியிடப்படுவது தொடர்ப்பிலும் கருத்து வெளியிட்டார்.
ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்குவதற்கு முன்னதாக எமது கட்சி தலைவர் சில கண்டிசன்களை போட்டதாக தெரிகிறது அவை அசாத் சாலியால் நிறைவேற்றப்பட்டதா என்பது அவருக்கும் தலைவருக்கும் இடையே உள்ள விடயம்.அதேநேரம் அசாத் சாலிக்கு அரசியலில் முகவரிகள் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சிதான் அவரை உபமேயராக அழகு பார்த்ததும் மாகாண சபை உறுப்பினராக உயர்ந்தியதும் ஐக்கிய தேசிய கட்சியிதான் அதனை மறந்து அவர் செயற்படுவது தவறு.
நான் நானூறு சொற்ப வாக்குகளால் மாகாண சபையை இழந்தவன் பதவிகளை தருபவன் அல்லாஹ் எதுவித பதவிகளும் இல்லாமல் இருந்த போது ஆசாத் சாலி முஸ்லிம்களுக்கு குரல்கொடுத்தார் சமூகத்துக்காக குரல்கொடுக்க பதவிகள் தேவை இல்லை இம்முறை மத்திய மாகாண சபைக்கு என்னோடு முத்தலிப் ஹாஜியும் செல்கிறார் லாபிர் ஹாஜிஇஉவைஸ் ஹாஜி ஆகியோர் ஏற்கனவே மாகாண சபையில் உள்ளனர் நாம் அனைவரும் அசாத் சாலியுடன் ஒன்றிணைந்து சமூகத்துக்காக குரல்கொடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்
(அஸ்ரப் ஏ சமத்)