Published On: Monday, August 24, 2015
காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாபதி ஆணைக்குழுவின் விசாரணை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில்
காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக மூன்றாவது அமர்வின் மூன்றாள் நாள் விசாரணை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நடைபெற்ற விசாரணையின் போது ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்;ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் நூறுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்ததுடன், அவர்களுடைய வாய் மூல விசாரணைகளை பதிவு செய்தனர்.
திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற அமர்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை அளித்தனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இருந்து தமிழ் மற்றும் முஸ்லிம்களும் கணிசமான அளவு தங்களின் உறவுகளை கண்டறிவதற்கான விசாரணைகளை அளித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கி வரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி.பிரியந்தி சுரஞ்சனா வித்யாரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்