Published On: Tuesday, September 08, 2015
சாய்ந்தமருதில் சர்வதேச எழுத்தறிவு தின விஷேட நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும்
சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச எழுத்தறிவு தின விஷேட நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எழுத்தறிவு தினம் பற்றி எழுத்தறிவும் இஸ்லாமும் எனும் தொனிப்பொருளில் மௌலவி கலிலுர் ரஹ்மான் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்கள் 17 பேருக்கு திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவினால் சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.
(ஹாசிப் யாஸீன்)