Published On: Thursday, September 03, 2015
உள்ளுராட்சி வாரத்தை முன்னெடுக்கும் வேலைத்திட்டம்
அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அப்போது தான் அதனை சிறந்த முறையில் நிறைவேற்ற முடியுமென அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீலுல் றஹ்மான் தெரிவித்தார்.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (02) அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது. இதில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இவ்வேலைத்திட்டமானது தீகவாபி, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை மற்றும் திராய்க்கேணி ஆகிய பிரிவுகள் முழுவதிலும் உள்ளுராட்சி வாரம் விரிவுப்படுத்தப்பட்டு அமுல்படுத்தி இவ்வேலைத் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதோடு பிரதேச சபையை ஒரு முன்மாதிரியான நிறுவனமாக மாற்றுவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நாம் நடாத்த திட்டமிட்டுள்ள உள்ளுராட்சி வாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லலாம்.
இந்த உள்ளூராட்சி வாரத்தை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்த முதல் வாரமான 7ஆம் திகதி நடமாடும் சேவை தினமாகவும், 08ஆம் திகதி வருமான அபிவிருத்தி தினமாகவும், 09 ஆம் திகதி சுகாதார தினமாகவும், 10 ஆம் திகதி கல்வி மற்றும் நூலக தினமாகவும், 11 ஆம் திகதி சுற்றாடல் தினமாகவும், 12 ஆம் திகதி மக்கள் தினமாகவும், 13 ஆம் திகதி விளையாட்டு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீலுல் றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
அபு அலா -