Published On: Wednesday, September 02, 2015
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் முயற்சியினால் 29 மில்லியன் நிதி ஒதுக்கீடு
அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் கல்முனை முஸ்லிம் பிரதேச செலயத்திற்குட்பட்ட கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்திற்கென 29 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.எம்.தௌபீக் இன்று தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் காலத்தில் மேற்படி பிரதேசங்களுக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தங்களது பிரதேச வீதிகள் மற்றும் வடிகான்களை அபிவிருத்தி செய்துதருமாறு கேட்டுக் கொண்டதிற்கினங்க மேற்படி நிதிகளைக் கொண்டு இவ்வபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா வீதம் 29 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வேலைத்திட்டங்களில் சில ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஏனைய வேலைத்திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.
அபு அலா -