Published On: Wednesday, September 02, 2015
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்டில் இலங்கை அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சம நிலை வகித்தன. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி 28 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனையை படைத்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:- இலங்கைக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அணியின் அருமையான ஆட்டம் நமக்கு பெருமை அளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.