எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, September 02, 2015

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கியது

Print Friendly and PDF

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் தங்கி இருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

7–வது நாளான புதன்கிழமை காலை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் தற்போது உள்ள இடத்தில் இருந்து சிவாஜி சிலையை அகற்றக்கூடாது. அதற்கு பதிலாக சிவாஜியின் வேறு தோற்றத்தில் சிலை அமைத்து அதனை மணிமண்டபத்தில் வைக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு என்பது இறுதி தீர்ப்பு அல்ல. எனவே தமிழக அரசு சிவாஜி சிலையை அகற்றாமல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாஜி மன்றம் சார்பிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அதே இடத்தில் சிலை இருக்கும். கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கியது போல சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவதில் முனைப்பு காட்டக்கூடாது. தி.மு.க. ஆட்சியின்போது மக்களின் வரிப்பணத்தில் தான் சிவாஜி சிலை வைக்கப்பட்டு உள்ளது. எனவே முதல்வர் ஜெயலலிதா சிவாஜி சிலையை அதே இடத்தில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2