Published On: Wednesday, September 16, 2015
இராஜாங்கஅமைச்சராகஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அமைச்சுப் பொறுப்பினைபொறுப்பேற்றுக் கொண்டார்.
புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்கஅமைச்சராகஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று(16)பம்பலப்பிட்டியிலுள்ளதனதுஅமைச்சுக் காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்பினைபொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டபுனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இங்குஉரையாற்றும் பொழுதுபுனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்கஅமைச்சராகஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டிருப்பதானதுஒருபெருமையானவிடயமாககருதுவாதாககுறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்
வடக்குகிழக்குபகுதிகளில் பார்க்கும் போதுமுக்கியமாககிழக்குமாகாணத்திலும் மன்னாரிலும் முஸ்லிம் மக்கள் அதிகளவாக இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள். அவர்களுக்குபலபிரச்சினைகள் இருக்கின்றன.அந்தப் பிரச்சினைகளெல்லாம் தீர்ப்பதற்குஅவர்களுடையஒத்துழைப்புடன் தான் செய்யவேண்டும்என்றுதான் நான் கருதுகின்றேன்.
அதற்குஏற்றவிதத்தில் கௌரவ ஜனாதிபதியும் கௌரவபிரதமர் அவர்களும் என்னையும் கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் நியமித்து இருக்கின்றார்கள். நான் என்னால் முடிந்தஉதவிகளைஅவர்களுக்குகொடுத்துதமிழ், முஸ்லிம்,சிங்களம் என்றவேறுபாடு இன்றிசகலருக்கும் சமமானசலுகைகளைக் கொடுத்துஅவர்களுடையதேவைகளைப் பூர்த்திசெய்யவதில் உறுதியாய் இருக்கின்றேன்.
எனவேஎல்லோரும் கடந்தகாலகசப்பானநினைவுகளையெல்லாம் மறந்துதமிழ்,சிங்களம், முஸ்லிம் மக்கள்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இந்ததாய்திருநாட்டைமுன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லஅனைவரினதும் ஒத்துழைப்பைஎதிர்பார்பதாகவும் அமைச்சர் இதன் போதுகுறிப்பிட்டார்.
அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்கஅமைச்சராகபதவிப் பிரமாணம் செய்வதையிட்டுமகிழ்ச்சியடைவதாககுறிப்பிட்டஅவர் மேலும் உரையாற்றுகையில் இந்தஅமைச்சைத் தந்துஎன்னைநியமித்தஅதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களுக்கும் கௌரவபிரதமர் ரணில் விக்கிரசிங்கஅவர்களுக்கும் என்னுடையமனமார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தஅமைச்சைப் பொறுத்தவரையில் இது முக்கியமானஅமைச்சாகும். குறிப்பாகவடக்குகிழக்கில் இடம்பெற்றயுத்தத்தினால் இடம்பெயர்ந்தபல இலட்சக் கணக்கானமக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதிலும் இன்னும் அவர்களுக்குத் தேவையானஅடிப்படைவசதிகள் நிவர்த்திக்கப்படாதஒருநிலையேகாணப்படுகின்றது. குறிப்பாகநான் பிரதிநிதித்துவம் செய்கின்றமட்டக்களப்புமாவட்டத்திலே கூட எனக்குத் தெரியும் மீள்குடியேற்றப்பட்டபலகிராமங்களில் இன்னும் அவர்களுடையதேவைகளானவீட்டுவசதிகளோ,தொழில் வாய்ப்புவசதிகளோ, ஏனைய அடிப்படைவசதிகளோபெற்றுக் கொடுக்கப்படவில்லை.
அதேநேரம் இன்னும் சுமார் 50000க்கு உட்பட்;ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் பல்வேறுகாரணங்களால் நண்பர்களுடையவீடுகளிலும் அகதிமுகாம்களிலும் வாழ்கின்றனர். பலஆயிரம் மக்கள் நாட்டுக்குவெளியேகுறிப்பாக இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவர்களைமீண்டும் குடியேற்றிஅவர்களுடையபொருளாதாரவசதி,தொழில்வாய்ப்புக்கள்,வீட்டுப்பிரச்சினைகள்உட்படஅடிப்படைத் தேவைகளைத் தீர்த்துமுழுமையானமீள்குடியேற்றத்தைச் செய்யவேண்டுமாக இருந்தால் அதற்காகஎல்லோரும் மிககடுமையாகஉழகை;கவேண்டியதேவை இருக்கிறது.
ஆகவே ஜனதிபதியவர்களும் பிரதமர் அவர்களும் எங்கள் மீதுநம்பிக்கைவைத்துஇந்தபாரியபொறுப்பைஒப்படைத்திருக்கின்றார்கள். ஆகவேநாங்கள் எதிர்பாக்கிறோம் எல்லோரதும் குறிப்பாகசர்வதேசசமூகத்தினரின் ஒத்துழைப்போடும் சர்வதேசதொண்டுநிறுவனங்களின் ஒத்துழைப்போடும் இந்தப் பணியைச் செய்யவேண்டியதேவை இருக்கிறது.எதிர்வருகின்றஐந்துஆண்டுகளில் மிகச் சிறப்பாகசெய்துவடகிழக்கிலே இடம்பெயர்ந்ததமிழ், முஸ்லிம்,சிங்களமக்கள் எல்லோரும் தங்களதுசொந்தபிரதேசங்களில் மீளக் குடியமர்ந்துஅவர்களுடையஅடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கஎன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என இங்குகுறிப்பிட்டார்.
ஏ.எல்.எம்.தாஹிர்
ஊடகப் பிரிவு
புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சு.