Published On: Wednesday, September 16, 2015
15வது நினைவு தினம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்முனைத் தொகுதியிலுள்ள பல பாடசாலைகளில் தலைவர் தின நிகழ்வுகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் இன்று (16) புதன்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் இடம்பெற்ற தலைவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றிய நினைவுப் பேருரையினை மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தினர்.
இதன்போது மாணவர்களுக்கு தங்களது வாழ்வில் முன்மாதிரியாக பின்பற்றக்கூடிய மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் ஆளுமை, தன்நம்பிக்கை, தைரியம், இராஜதந்திரம், விடாமுயற்சி, அரசியல் அதிகாரம், சமூக அக்கரை, அபிவிருத்தி அரசியல், ஆத்மீக ஈடுபாடு என்பன பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார்.
தலைவர் தின ஏனைய நிகழ்வுகள் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயம், கல்முனை அல்-மிஸ்பா வித்தியாலயம், கல்முனை அல்-பஹ்றியா வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா வித்தியாலயம், மருதமுனை புலவர் மணி வித்தியாலயம், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சட்டத்தரணி எம்.ஏ.ஹாதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்ஐ.எம். பிர்தௌஸ், மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.அமீர், சட்டத்தரணி அமீருள் அன்சார் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றிய நினைவுப் பேருரையினை மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தினார்கள்.
(ஹாசிப் யாஸீன்)