Published On: Monday, September 14, 2015
குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதி மன்றில் விசாரைணை செய்வதன் மூலம் ஈழத்தமிழர்கள் நீதியைப்பெற்று கொள்ளலாம்
இனவழிப்பிற்கு சர்வதேச நீதிவிசாரணையை வலியுருத்தி 13/09/2015 ஞாயிற்றுக்கிழமை காலை களுவாஞ்சிகுடி இராஜமாணிக்கமண்டபத்தின் அருகில் கையொப்பம் இடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பல மக்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வெயில் என்று பாராது களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த பல மாதர்சங்க உறுப்பினர்கள் கையொப்பம் இட்டனர்.அத்தோடு பட்டிருப்பு தொகுதியில் வாழும் பல மக்கள் கையொப்பம் இடுவதில் மிக ஆர்வமாக இருப்பதை காணக்கூடியதாக அமைந்தது.மேலும் இங்கு வருகைதரும் மக்களின் ஒருமித்த குரலாக தமிழ் மக்களின் விடுதலைக்கும் உள்ளுர் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக அமையும் தவிர வேறு எந்த பயணும் இல்லை சிங்கள தேசத்தின் உள்ளக விசாரணை என்பது ஈழத்தமிழருக்கு விடிவைத்தரப்போவதில்லை சிங்கள அரசின் ஒட்டுக்குழுக்களும் சிங்கள அரசுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களுமே சுபபோகம் அனுவவிப்பார்கள்
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதி மன்றில் விசாரைணை செய்வதன் மூலம் ஈழத்தமிழர்கள் நீதியைப்பெற்று கொள்ளலாம் என்பதே மக்களின் உறுதியான முடிவாக உள்ளதை அறியக்கூடியதாக இருந்தது.
( முஹம்மட் றின்ஸாத் )