எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 28, 2013

தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தில் நிந்தவூர் பள்ளிவாசல்களுக்கு 48 இலட்சம் ரூபா

Print Friendly and PDF


தேசத்துக்கு மகுடம் தேசிய திட்டதின்கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 13 பள்ளிவாசல்களுக்கு சுமார் 48 இலட்சம் ரூபா நிதி, வணக்கஸ்தலகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள. நிந்தவூர் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் பள்ளிவாசல் தலைவர்களிடம் இதனை கையளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நிந்தவூரிலுள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் ஊரின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் தங்களினை முழுமையாக இணைத்து காத்திரமான பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு நவீன இலத்திரனியல் வாசிகசாலையினையும், பாடசாலையின் திருத்த வேலைகளுக்காக 10 இலட்சம் ரூபா நிதியினையும், வடிகான் புனரமைப்புக்காக 33 மில்லியன் ரூபா நிதியியினையும் அரசடித் தோட்டம், அட்டப்பள்ளம் இணைப்பு பாலத்துக்கு நிதியும் எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

(முஹம்மட் பாயிஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2