எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 21, 2013

ஆறு 'குஞ்சு குருமான்களை' தன்னந் தனியே வீட்டில் விட்டு 7வது பிள்ளையின் பிரசவத்திற்குச் சென்ற தாய் மாயம்

Print Friendly and PDF




பெற்றோரை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகள் இரத்தினபுரி - கஹவத்தை பிரதேச சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இரத்தினபுரி - கெஹெல்வத்த - பொத்துபிட்டியில் வசிக்கும் 2 தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட ஆறு பிள்ளைகளே இவ்வாறு சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இரக்குவானை பொலிஸார் தெரிவித்தனர். 

ஏற்கனவே 6 பிள்ளைகளை பெற்றெடுத்த தாய், 7வது பிள்ளையை பெற்றெடுக்கவென  கடந்த 5ம் திகதி பிரசவத்திற்கென வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் தந்தையும் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். 

சென்றவர்கள் சென்றவர்கள்தான், இன்னும் இவ்விருவரும் இதுவரையில் வீடு திரும்பவில்லை எனவும் இவர்கள் தொடர்பில் தகவல் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனால் அநாதரவான 6 பிள்ளைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு இறக்குவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அவர்களை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2