எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 15, 2013

கபடமில்லாத அணிலாகிய நான்

Print Friendly and PDF




ஒரு புலர் காலைப்பொழுதில் 
என் வீட்டு கொய்யா மரக்கிளையில் 
அணில் குஞ்சு போல அல்லது 
கொய்யப் பழம்  கொறிக்கும் 
அழகான அணில் போலாயினும் 
நானும் நீங்களும் எக்காலமும் 
வாழ்ந்திடவும் தீர்மானிப்பதுண்டு 

அயல் பறவையின் பசியுணர்ந்து 
தான் புசித்த கொய்யாவில் 
மீதம் வைத்து விட்டுப் போகிற 
அணிலுக்கு முன்னால் மனிதம் தோற்று 
வெகு நாளாயிற்று 

எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற 
அணிலுக்கான அன்றாட ஜீவிதம் 
அவ்வளவு இலகுவானதல்ல என்பதுவும் 
சில தருணங்களில் 
நன்றியில்லாத காகங்கள் அமர்ந்திருக்கும் 
கொய்யா மரக்கிளை பற்றியதான வெறுப்பு 
அணில் குஞ்சுகளுக்கும் சேர்த்துத்தான் 

இருந்தபோதிலும் 
கபடமில்லாத ஒரு அணில் குஞ்சு போலாவது 
இங்கே வாழ்வதில் சிக்கலில்லைஎன்பது 
எனக்குள் பிறப்பெடுக்கிற மனித உணர்வின் 
வழமையான பொறாமையும்தான் 

மற்றவருக்காக பாதியை புசிக்கும் 
அணிலாகி ஜீவிதம் நகர்த்துவதில் 
இனியும் எனது சஞ்சாரம் தொடரலாம் 
என் வீட்டு முற்றத்தின் 
கொய்யா மரக்கிளை தறிக்கப்படும் வரை .

-எஸ்.ஜனூஸ்-

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2