எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 19, 2013

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வாழைச்சேனை விஜயம்

Print Friendly and PDF


மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க ஏற்பாட்டின் பேரில் பிரதம நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வாழைச்சேனை நீதி மன்றத்திற்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்டார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் நீதி மன்ற கட்டடங்களையும், புதிதாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் புனருத்தாரன நடவடிக்கைகளையும் பார்வையிட உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதன்போது நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சிசிர ரத்நாயக்க மற்றும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் வி.வினோபா இந்திரன் ஆகியோர்களும் மட்டக்களப்பு வாழைச்சேனை நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.

இவர்கள் மட்டக்களப்பு, ஏறவூர், வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

(என்.குகதர்ஷன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2