எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 19, 2013

யானை தாக்கி விவசாயி பலி: முள்ளிவட்டுவானில் சம்பவம்

Print Friendly and PDF


மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டுவான் பகுதியில் உள்ள வயல்வெளியிலேயே நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

முள்ளிவட்டுவான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொன்னுத்துரை மயில்வாகனம் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

யானையைக் கண்ட இவர் அருகில் உள்ள குளம் ஒன்றில் பாய்ந்து நீந்தி தப்பித்துக்கொள்ள முயற்சித்தபோதிலும், இவரைப் பின் தொடர்ந்து துரத்திய யானையும் அந்தக் குளத்தினுள் சென்று இவரை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இதனைக் கண்ட பொதுமக்கள் இவரது சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(குகதர்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2