எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 19, 2013

வாழைச்சேனையில் வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்பு

Print Friendly and PDF


மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெடிபொருட்கள் சிலவற்றை விசேட பொலிஸ் பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை கைப்பற்றியுள்ளனர். கிளைமோர் 01, மிதிவெடிகள் 03 போன்றவையே கைப்பற்றப்பட்டுள்ளது.


எஸ்.ஜ.மாயாரஞ்சன் தலைமையிலான பொலிஸ் விசேட பிரிவினர் இவற்றை கும்புறுமூலை காட்டுப்பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். இதன்போது வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தனவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.


இவை அனைத்தும் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று உதவி அத்தியட்சகர் லால் செனவிரத்தன தெரிவித்தார். இவை கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரினால் நாசகார செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என மேலும் அவர் தெரிவித்தார்.

(த.லோகதக்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2