எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 21, 2013

வாகரை சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கலாசார நிகழ்வு

Print Friendly and PDF


மட்டக்களப்பு வாகரை பொலிஸார் கண்டலடி மற்றும் ஊரியன்கட்டு சிவில் பாதுகாப்புக் குழுக்கள் இணைந்து எஸ்கோ நிறுவனம் மற்றும் ஆசிய அமைப்பின் அனுசரணையில் நடாத்திய கலாசார நிகழ்வு வாகரை மகா வித்தியலாய பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.


 வாகரை வடக்கு சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்ன, எஸ்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்தியோன், வாகரை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சிறுவர் கழகங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கிடையில் நாடாத்திய விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டுப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

(குகதர்ஷன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2