Published On: Wednesday, March 20, 2013
பொத்துவிலில் தொடர் ஹர்த்தாலுக்கு அழைப்பு

அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தை ஆக்கிரமிப்புச்செய்து கொண்டுவரும் பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராகவும், மண்மலையில் நிறுவப்பட இருக்கும் சுமார் 350 அடி உயரமான சிலை நிர்ணயிப்பிற்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொத்துவில் பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு நாட்களிலும் தங்களின் வியாபார தளங்கள், அரச காரியாலயங்கள், பாடசாலைகளை மூடிவிட்டு பொத்துவில் மண்னை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பெளத்த ஆதிக்கத்தையும், சிலை நிர்ணயிப்பையும் நிறுத்துவதற்கு வெளிநாட்டு வாழ் பொத்துவில் மக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பினை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.