எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 20, 2013

தண்ணீரை வாசிப்போம்

Print Friendly and PDF







கடவுள் எழுதிய 
கவிதைப் புத்தகம் தண்ணீர்
புத்தகத்தின் 
அணிந்துரையை கடல் எழுத 
ஆசியுரையை நீர்வீழ்ச்சிகள் 
நிரப்பியுள்ளன

நதி 
ஆறு 
குளம் 
குட்டை என்று 
புத்தகத்தின் பொருளடக்கம் விரிகிறது

நிலமென்னும் வாசிகசாலையில்
இந்நூல் இல்லாது போனால்
மேகத்திடம் இரவல் வாங்கி
பயிர்கள் தினமும் இதை படிக்கின்றன

இலவசமாக 
இது கிடைப்பதால் 
மனிதர்கள் 
தண்ணீரை சரியாக வாசிப்பதில்லை 
சிலநேரங்களில் கிழித்து எறிகின்றார்கள்.
சிலநேரங்களில் விரித்துவைத்துவிட்டு உறங்கிவிடுகிறார்கள்

கிணற்றுக்குள் மரபுக்கவிதையாய்
இருந்த தண்ணீர் 
குழாய் கிணற்றில் புதுக்கவிதையாகின
பின்பு போத்தலில் அடைக்கப்பட்டு 
பின்நவீனமாய் மாறிவிட்டது

ஆபிரிக்கா கண்டத்தில்
ஒரு பக்கமாவது 
படிக்க கிடைக்காத என்று 
மக்கள் பரிதவிக்க
எம்மவர்கள் அதன் கவித்துவத்தை கண்டுகொள்ளுவதாய் தெரியவில்லை
அதில் காறி உமிழ்கின்றார்கள்

இது இப்படியே போனால்
நாளை எந்த நேரமும் 
எதுவும் நடக்கலாம்

எதிர்காலத்தில்
தங்கத்தை கொடுத்து தண்ணீர் 
வாங்க வேண்டிவரலாம்

மூன்றாம் உலகப் போர் 
பெற்றோலுக்காய் நடந்தால்
நான்காம் உலகப்போர் 
தண்ணீருக்காய் நடக்கலாம்

தண்ணீர் வாங்க 
செவ்வாய் கிரகம் சென்ற மனிதன்
முண்டியடித்து
மூக்கையுடைத்துக்கொள்ளலாம்

அரசாங்கத்தால்
சம்பளத்துக்கு பதிலாய்
ஆளுக்கொரு போத்தல்
தண்ணீர் வழங்கப்படலாம்

ஒருபோத்தல் தண்ணீர் 
வைத்துள்ளவனுக்கே
திருமணம் நடக்கலாம்

நாளை எந்த நேரமும் 
எதுவும் நடக்கலாம்...
தண்ணீருக்காய் நாம் கொல்லப்படலாம்.

கவிஞர் பொத்துவில் அஸ்மின்



Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2