Published On: Wednesday, March 20, 2013
யாழ். முஸ்லிம்கள் பானையில் இருந்து அடுப்புக்கு

முஸ்லிம் பாடசாலை தமிழ் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏனைய பாடசாலைகளும் மூடப்படும் நிலை அல்லது மாற்றப்படும் நிலை தோன்ற வாய்ப்பிருக்கிறது.
நாட்டில் முக்கிய வர்த்தகமொன்றில் இருந்து தமக்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுவர். இதன் தொடர்ச்சியாக யாழ்> கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் தமது இருப்பை இழந்து நிட்கும் பரிதாப நிலை தோன்றும்.
இந்நிலையானது யாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றிமுழு நாட்டு முஸ்லிம்களுக்குமான சவால் நிறைந்த ஒரு விடயமாக மாற்றமடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எனவே, இந்த ஆபத்திலிருந்து யாழ் முஸ்லிம்களையும் அவர்களது இருப்புக்களையும் பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தலையாயக் கடமையாகும்.
இது குறித்து சிவில் சமூகத் தலைமைகளும் அரசியல் தலைமைகளும் சிந்திக்க வேண்டியுள்ளதுடன் இலங்கை முஸ்லிம் சமூகம், யாழ் முஸ்லிம்கள் விடயத்தில் கடைபிடித்து வரும் மெத்தனப் போக்கை உதறித் தள்ளிவிட்டு களத்தில் இறங்க வேண்டிய காலம் வந்திருக்கிறது.
1990 களில் பலவந்த வெளியேற்றத்தின் மூலம் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமூகம் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்க அனுமதிக்க முடியாது.

எனவே மீளக்குடியேறச் செல்லும் முஸ்லிம்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்து மீள் குடியேற்றத்தின் மீதான அவர்களது அக்கறையை வலுப்படுத்த வேண்டும்.
உயர் அதிகாரிகளின் புறக்கணிப்புகள் மற்றும் அரச> அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளின்மை போன்றவற்றால் விரக்தியுன்று மீள்வெளியேறும் முஸ்லிம்களைத் தடுத்து அவர்களை நிரந்தரமாகக் குடியேற அனைத்து வகையான உதவி ஒத்தாசைகளையும் வழங்க சமூகம் முன்வர வேண்டும்.
சிதைவடைந்த தமது வீடுகளில் மீள்குடியேறி சிரமங்களுடன் அங்கு காலம் கழிக்கும் குடும்பங்களின் வீடுகளைப் புனரமைத்துக் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம் நிறுவனங்களின் உதவி வழங்கப்பட வேண்டும்.
இச்செயற் திட்டத்தைத் திறம்பட செய்ய வேண்டும் என்ற நோக்கில் சில சிவில் சமூக நிறுவனங்களை உள்ளடக்கிய ஷயாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்| எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு களத்தில் செயற்பட்டு வருவதைக் காணமுடிகிறது.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் நலன் விரும்பிகள் அவர்களுடன் இணைந்து இப்பணியை முன்னெடுப்பதானது பலமிக்கதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 0770525391, 0777805399, 0772272742 ஆகிய தொலைபேசி இலக்கங்கடாக குறித்த அமைப்பினரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இப்பணி கால தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்கள் விலைபோய்க் கொண்டிருக்கிறது என்பதை சமூகம் மறந்துவிடக் கூடாது.
இந்நிலை தொடர்ந்தால் பானையில் வெந்து கொண்டிருக்கும் யாழ் முஸ்லிம்கள் அடுப்புக்குள் விழுந்து கருகுவதை யாராலும் தவிர்க்க முடியாது.