எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 20, 2013

யாழ். ஒஸ்மானியா கல்லூரி புதுப்பொலிவு பெறும்: சுபியான் மெளலவி நம்பிக்கை

Print Friendly and PDF


யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் பௌதீக தேவைகளை நிவர்த்தி செய்யவென விக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் வடமாகாண ஆளுநர் ஏ. சந்திரசிறியிடம் யாழ். மாநகர சபை உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி ஆளுநரிடம்  அவரது செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை உறுப்பினர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்; யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள், கட்டுமானத் தேவைகள், பௌதீகத் தேவைகள், பல வருடங்களாக காணப்பட்டன. ஆனால் எனது முயற்சியினால் ஆளுநர் மூலம் படிப்படியாக நிதியுதவி பெறப்பட்டு இக்கல்லூரி யை அபிவிருத்தி செய்து வருகிறேன்.

இவ்வருடம் ஒஸ்மானியாக் கல்லூரியின் பொன் விழா வரடமாக இருப்பதனால் இன்னும் பல்வேறு வேலைகளை முடிப்பதற்கு இவ்வருடம் நிதி ஒதுக்கீட்டை செய்து தருமாறு மீண்டும் கேட்டிருந்தேன். இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஒஸ்மானியாக் கல்லூரியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தி தருவதாக வும்,இதனை அமெரிக்க தூதுவராலயம் மூலம் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மேலும் இவ்வேலைத்திட்டங்களை நேரில் வந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்ததாக மாநகர சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

(பா.சிகான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2