எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, March 12, 2013

கல்முனை ஸாஹிறா கல்லூரி கட்டடத்தின் ஒருபகுதி உடைந்தது

Print Friendly and PDF


கல்முனை ஸாஹிறா கல்லூரியிலுள்ள 3 மாடிக் கட்டடத்தின் ஒருபகுதி இன்று அதிகாலை உடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஆதம்பாவா துருவத்துக்கு தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது; 1990ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த 3 மாடி கட்டிடம் அதிகாலை வேளயைில் உடைந்தள்ளது. 15 வகுப்பறைகளை கொண்ட இந்த கட்டடத்தில் 10ஆம் தரத்திலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன.

3000 மாணவர்கள் கற்கும் கல்முனை ஸாஹிறா கல்லூரியில் இந்தக் கட்டடம் உடைந்தமையினால், தரம் 10இல் கல்விபயிலும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைளை தொடர்வது கேள்விக்குறியாகவுள்ளது. இதனால் இம்மாணவர்கள் மரத்தின் கீழிருந்தே படிக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

உடைந்துபோன இந்த கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்துதருமாறு அறிவிக்கப்பட்டு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறித்து உரிய அதிகாரிகள் பாராமுகமாகவே இருக்கின்றனர். உடைந்த கட்டடத்தை அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர். அதற்கான மாற்றுக் கட்டடமொன்றை அமைத்து தருவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே, பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உடைந்துபோன இந்த கட்டடத்தை இடித்துவிட்டு அவ்விடத்தில் புதியதொரு கட்டடத்தை உடனடியாக அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுப்பதாக அதிபர் மேலும் எமக்குத் தெரிவித்தார்.






(எச்.எம்.ஷிறான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2