Published On: Sunday, March 17, 2013
அப்பாவுக்கு...

ஏக்கங்களை மட்டும்
விழிகளில் நிரப்பி கடந்ததை நினைத்து
மனசு
பக்கத்திலிருந்தும்
கண்ணாடி விரிசல் அப்பா
உங்களுக்கும் எனக்கும்
எப்போது தூரமானீர்கள் என்னிடமிருந்து
உங்கள்
கைகளை விட்டு தனியே
நடக்கத்தொடங்கினேனா அப்போதா
நீங்கள்
இல்லாமல் தனியே சைக்கிள்
ஓடத்தொடங்கினேனே அப்போதா
உங்களுக்கு
பிடித்ததை படிக்காமல்
எனக்கு பிடித்ததை படிக்க தொடங்கினேனே அப்போதா
எனக்கான
முடிவுகளை நானே
எடுக்க தொடங்கினேனே அப்போதா
கைபிடித்து நடந்தபோது
நிலா காட்டி சிரித்தபோது
நான் அழுதபோது சேர்ந்து அழுதபோது
கை பிடித்து எழுத பழக்கியபோது
உங்கள் தோள்களில் இருந்தபோது
முடிவுகளினை தட்டிக்கொடுத்தபோது
நான் பார்த்த அப்பாவை காணவே இல்லை இப்போது
கருத்துகளும்
முடிவுகளும்
ரசனைகளும் ஒன்றுதானே
அப்படியிருந்தும்
எப்படி வந்தது இடைவெளி ?
- எஸ்.மதி -