Published On: Monday, March 18, 2013
ஹிந்து மதம் - பௌத்தம் - இஸ்லாம் ஓர் ஒப்பீட்டாய்வு நூல் வெளியீட்டுவிழா
பன்னூலாசிரியர் சீ.எம்.ஏ. அமீன் எழுதிய ‘ஹிந்து மதம் - பௌத்தம் - இஸ்லாம் ஓர் ஒப்பீட்டாய்வு' என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியளவில் திஹாரிய ‘லப்சன்” வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

ஏ.ஆர்.ரிஸ்வி மொஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் விசேட அதிதியாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சரத் பெரேரா கலந்துகொண்டார்.
சமயங்களுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு நூலொன்று தமிழ் மொழியில் வெளிவருவது இதுவே முதல் தடவையாகும். இந்நூலின் விமர்சன உரையை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) வழங்கினார். இந்நிகழ்வை இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் திஹாரிய கிளை ஏற்பாடு செய்திருந்தது.
(ஸப்ரான் எம். மன்சூர்)