Published On: Monday, March 18, 2013
வடபுல முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே
முஸ்லிம் மக்களாகிய நாம் யாழ்ப்பாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது எமக்காகவும் எமது உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மௌலவி தெரிவித்தார்.
யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள சந்தை உட்புறத்தில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு கடைத்தொகுதிகளைக் கையளிக்கும் நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வர்த்தகத்தை மட்டுமல்லாது இன உறவையும் ஐக்கியத்;தையும் ஏற்படுத்தும் வகையில் கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து எதிர்காலத்தில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக வரலாற்றைக் கொண்டவர்களாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வந்த நிலையில் 1990ம் ஆண்டு புலிகள் அமைப்பால் துப்பாக்கி முனையில் இரண்டு மணிநேர கால அவகாசத்தில் கட்டாயத்தின் பேரில் நாம் வெளியேற்றப்பட்டோம்.
அவ்வேளையில் எமக்கான உரிமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும்இ உண்மைக்காகவும்இ நீதிக்காகவும் குரல் கொடுத்த உத்தமர் அமைச்சர் அவர்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமன்றி, யுத்தத்திற்கு பின்னரான அமைதிச் சூழலால் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற யாழ்ப்பாணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தது மட்டுமன்றி, முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றம், அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காண்பது போன்ற விடயங்களிலும் அக்கறையுடன் உழைத்து வருபவர் அமைச்சர் அவர்களே என்றும், அந்த வகையில் நடைபாதை வியாபாரிகளுக்காக முஸ்லிம்களுக்கு மாற்றீடாக சந்தையின் உட்புறமாக கடைத்தொகுதிகளை அமைக்கவும் அரும்பாடுபட்டு உழைத்தார் என்றும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரைக்கமைய மாநகர சபையால் புதிதாக அமைக்கப்பட்ட 29 கடைகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்து கையளிக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்இ கடந்தகால அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டல்கள் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உறவில் இடைவெளி இருந்துவிட்ட போதிலும் மீண்டும் ஒரு நல்லுறவு ஏற்படக்கூடியதொரு சூழல் தோன்றியுள்ளது.
அத்துடன், முஸ்லிம் மக்களது ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென்று தெரிவித்த அமைச்சர், வர்த்தகர்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனான் ஆகியோர் உடனிருந்தனர்.
(பா.சிகான்)