எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 18, 2013

மத்தள விமான நிலைய திறப்பு விழாவில் சர்வமத தலைவர்கள் புறக்கணிப்பு

Print Friendly and PDF


மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் வைபவத்தில் ஏனைய மத வழிபாடுகளுக்கு நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவுமில்லை. ஜனாதிபதியின் ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் ஆலோசகர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவர்கள் இவ்வைபவத்திற்கு அழைக்கப்பட்டும் அவர்களுக்கென பௌத்த மத தேரர்கள் வரிசையில் அமர முடியாது எனத் தெரிவித்தும் அவர்கள் சாதாரண பிரமுகர்கள் ஆசனத்தில் ஒதுக்குப்புறமாக அமர்த்தப்பட்டதாகும் பௌத்தமத வழிபாடுகள் ஆசிர்வாதம் மட்டுமே இடம்பெற்றன என ஐனாதிபதியின் இஸ்லாமிய மத விவகார ஆலோசகர் ஹசன் மொளலானா தெரிவித்தார்.

கடந்த 3 வருடங்களாக அரசின் தேசிய வைபவங்களில் 4 மத நிகழ்வுகளும் ஆசிர்வாதமும் நடைபெற்றுவந்தன. முதன் முறையாக இவ்வைபவத்தில் மட்டும் பௌத்த மத நிகழ்வுகளும் ஆசிர்வாதமுமே நடைபெற்றன. இதற்காக 500க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அழைக்கப்பட்டு விசேட மேடையில் அவர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். 

ஆனால், கடந்த வருடம் கொட்டாவ காலி வீதி அதிவேக பாதை திறக்கும் வைபத்தில் சகல மத நிகழ்வுகளும் நடைபெற்று பௌத்த மதத் தலைவர்கள் அமரும் வரிசையில் எங்களுக்கு ஆசனமும் ஒதுக்கப்பட்டதோடு ஐனாதிபதியை ஏனைய மதத்தலைவர்களும் ஆசீர்வதித்து பொன்னாடை போத்தி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்தவாரம் பொதுபல சேனவின் செயலாளர் ஞானதேரர் ஊடக மாநாட்டில் ஒன்றில் பின்வரும் கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அவற்றை அரசு ஏற்று இந்த நிகழ்வில் அமுல்படுத்தியுள்ளதாக தென்படுகின்றது. பொதுபல சேனவின் செயலாளர் தெரிவித்த கருத்தாவது;

இந்த நாடு பௌத்த நாடாகும். தேரர்கள் வரிசையில் ஒரே மேடையில் ஏனைய மதங்களின் ஹிந்து மத குருக்களோ, மௌலவிகளோ, கிறிஸ்தவ மத பாதிரியார்களோ அமரக்கூடாது. இந்த நாட்டில் நடக்கும் தேசிய வைபவங்களில் பௌத்த மத நிகழ்வுகள் மட்டுமே இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்தை அரசு இன்று நிறைவேற்றியுள்ளது. இவ்வைபவத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்கள் தமிழர்களைப் பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்லஸ் தேவனாந்தா, கிறிஸ்த்தவ மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பீலிக்ஸ் பேரரா போன்ற அமைச்சர்களும் மற்றும் முஸ்லிம் நாடுகளின் உயர் ஸ்தானிகர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

டுபாயில் இருந்து வந்த அரேபிய விமானமே முதலில் தரையிரங்கியது. அவ்விமானத்தில் அரேபியர்கள் பெருந்தொகையினர் வந்திறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.









(அஸ்ரப் ஏ. சமத்)

படங்கள்: ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2