Published On: Sunday, March 17, 2013
எமது அடுத்த இலக்கு ஜெய்லானி: கண்டியில் பொதுபல சேனா காலக்கெடு

எமது அடுத்த இலக்கு கூரகல பிரதேசத்தை கைப்பற்றுவதே என்று இன்று நடைபெற்ற பொதுபல சேனாவின் கண்டி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 31ஆம் திகதிக்குள்ள முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியறேவேண்டும். இம்முறை வெசாக் பண்டிகையை கூரகல பகுதியில் தரிசனம் செய்து கொண்டாடுவோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரகல என்ற இடத்தில் அமைந்துள்ள ஜெய்லானி என்ற இடம் முழுமையாக சிங்களவர்களுக்கு சொந்தமானது. இதை முஸ்லிம்கள் கைப்பற்றியுள்ளார்கள். நாம் இனிமேல் ஹலால் பற்றி பேசமாட்டோம். அதை பாதுகாப்பு அமைச்சர் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.