எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 17, 2013

கண்டியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொது பல சேனாவின் கூட்டம் ஆரம்பம்

Print Friendly and PDF


பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டம் கண்டி பிரதான சந்தை கட்டிடத்தொகுதிக்கு முன்னாள் தற்போது இடம்பெற்று வருகிறது. சுமார் 1000 பேருக்கும் அதிகமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


300 வரையிலான பிக்குகள் இந்த ஒன்று கூடலில் கலந்துகொண்டுள்ள நிலையில் கண்டி பிரதேசத்தில் உள்ள அனைத்து விகாராதிபதிகளும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த கூட்டம் நடைபெறுவதால் கண்டி பிரதேச முஸ்லிம் மக்களிடையே இன்றைய தினம் அச்சநிலைமை ஒன்று காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கண்டி மா நகரெங்கும் பெளத்த கொடியும் பொது பல சேனாவை பிரதிபலிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த அலங்காரங்களை  கட்டுகஸ்தோட்டை நகர பகுதி முதல் கண்டி வரையில்  அவதானிக்க முடிகிறது.


இதேவேளை கண்டி முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள சந்தை கட்டிட தொகுதிக்கு முன்னாள்  பொது பல சேனா அமைப்பினர் கூட்டத்தினை நடத்திவருவதால்  அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாவண்ணம் விஷேட பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது  செய்தியாளர் தெரிவித்தார்.

(விடிவெள்ளி)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2