Published On: Friday, March 29, 2013
மண் சண்டையில் நகரசபை உறுப்பினர் தாக்கப்பட்டார் (வீடியோ இணைப்பு)
காத்தான்குடி பிரதேசத்தில் வடிகானுக்காக தோண்டப்பட்ட 30 டெக்டர் மண்னை விற்ற விடயம் தொடர்பாக கேட்கச் சென்ற என்னை சிபான் என்பவர் தாக்கியதாக காத்தான்குடி நகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அப்துல் லத்தீப் அலி சப்ரி குற்றம்சாட்டியுள்ளார். காத்தான்குடியில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ள இவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதகுறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்; காத்தான்குடி பிரதேசத்தில் வடிகானுக்காக வெட்டப்படுகின்ற மண்களை சிபான் என்பவர் எடுத்து விற்பதாகவும் அந்த வகையில் புதிய காத்தான்குடியில் வடிகானுக்காக வெட்டப்படுகின்ற எல்லா மண்களையும் புதிய காத்தான்குடியில் மாரி காலத்தில் ஜனாஸா அடக்கக்கூடிய மையவாடி அமைக்க சபையில் ஒரு தீர்மாணம் எடுத்துள்ளதாகவும் அந்த வகையில் புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி எப்.சி.ரோட்டில் வடிகானுக்காக மண் தோண்டப்பட்டிருந்தது அந்த மண்ணில் கிட்டத்தட்ட 30 டெக்டர் மண்னை ஏற்றி சிபான் என்பவர் விற்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.

நான் குறித்து இடத்துக்குச் சென்று இதுகுறித்து விசாரித்தபோது, அங்குள்ள ஒருவர் தொலைபேசி மூலம் சிபானை வரவழைத்தார். அங்கு வந்த சிபான் என்பவர் தூஷன வார்த்தைகளைப் பிரயோகித்து என்னை தாக்கினார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)