எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 18, 2013

இந்தியாவில் இன்னொரு இலங்கை பிக்கு மீது சரமாரியாக தாக்குதல்

Print Friendly and PDF


சென்னை சென்றல் ரயில் நிலையத்தில் இலங்கையை சேர்ந்த இன்னொரு புத்த பிக்குவை சிலர் சரமாரியாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்த அவர் மீது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்துள்ளது, தமிழீழ ஆதரவாளர்கள் என கூறப்படும் சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் நிலை குலைந்து போனார். தாக்குல் நடத்தியவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 

தகவல் அறிந்த வந்த போலீசார் புத்த பிக்குவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இவர் இலங்கையின் கண்டியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 20 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றவர் ஆவார். ஆன்மீக சுற்றுலாவிற்கு சென்று விட்டு ரயிலில் சென்னை திரும்பிய போது இந்த தாக்குதல் நடத்தபபட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா வந்த மற்றவர்கள் விமானம் மூலம் இன்று இலங்கை திரும்புகின்றனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2