Published On: Monday, March 18, 2013
யாழ்ப்பாணத்தில் உயிரைக் கொல்லும் வெள்ளைத் தேள்கள்

யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் வெள்ளைத் தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்து விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இத்தேள் எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.