Published On: Monday, March 18, 2013
மனித உரிமைகள் குறித்து ஆராய இலங்கை வருகிறார் நவநீதிம்பிள்ளை
மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் ஆராய ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மே மாதம் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான நவநீதம்பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கைக்கு எதிரான ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் தறுவாயில் உள்ளது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மே மாதம் இலங்கைக்கு நவநீதம்பிள்ளை வரக்ககூடுமென கூறப்படுகிறது.
இப்பயணத்தின் போது இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுப்பதுடன் தொடர்ந்தும் கண்காணித்து அறிக்கை ஒன்றையும் நவநீதம்பிள்ளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)