Published On: Thursday, March 21, 2013
இலங்கை மீதான போர்க்குற்றங்கள்: ஜெனீவா மாநாட்டில் இன்று வாக்கெடுப்பு

இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை ஜெனீவா நேரப்படி காலை 10 மணியளவில் (இலங்கை நேரப்படி பி.ப. 2. 30) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது. இந்தப் பிரேரணையில் இந்தியா இறுதி நேரத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாமென எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் ஜெனீவா அமர்வில் இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகளை வலியுறுத்தி அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. இவ்வாறான நிலையில் இவ்வருடமும் அமெரிக்க அனுசரணையில் இலங்கைக்கு எதிரான இப்பிரேரணை முன்வைக்கப்படுகின்றது.