Published On: Thursday, March 21, 2013
பொத்துவிலில் தூபி அமைப்பதற்கு எதிரான நான்கு நாள் ஹர்த்தால் ரத்து

பொத்துவில் பிரதேசத்தில் தூபி அமைக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்களால் இன்றுமுதல் நான்கு நாட்களுக்கு தொடராக அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் சுமுகமான தீர்வு பெறப்பட்டதையடுத்து கைவிடப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அம்பாரை அரசாங்க அதிபர் பொத்துவில் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், உலமா சபையினர், புத்திஜீவிகள் ஆகியோர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஹர்த்தாலை கைவிடுவதென இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(எஸ்.அஷ்ரப்கான்)