Published On: Friday, March 15, 2013
தயட்டகிருளைக்கு வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு

அம்பாறையில் நடைபெறவுள்ள தயட்டகிருள நிகழ்வில் கலந்து கொள்ளும் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அக்கரைப்பற்றின் நுரைச்சோலையிற்குச் அழைத்துச் சென்று சவூதி அரசாங்கம் 2009ஆம் ஆண்டு நன்கொடையாக நிர்மாணித்த 500 வீடுகளையும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகின்றனர்.
இதுவிடயமாக முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு 8 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினர் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் அம்பாறை மாடவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முகவரியிட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் இலங்கையில் ஆகக்கூடுதலான உயிர், உடமை இழப்புக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதொரு மாவட்டம் அம்பாறை மாவட்டமாகும். இம்மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுதும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் சவூதி அரசின் காலம்சென்ற இளவரசர் நைப்பை 2005ஆம் ஆண்டு மக்காவில் சந்தித்தார். அச்சமயத்தில் பேரியல் அஸ்ரப், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் அழிவுகள் பற்றிய அறிக்கையொன்றையும் சவூதி இளவரசர் னைபிடம் சமர்ப்பித்தார். இதன் பயணாக இளவரசர் சவூதி சரட்டபிள் நிறுவன அதிகாரிகளைக் தொடர்புகொண்டு இந்தோனேசியா நாட்டில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தயார்படுத்திய ஹிங் அப்துல் அசீஷ் வீடமைப்புத் திட்டத்திட்டத்தினை இடைநிறுத்தி இத்திட்டத்தினை இலங்கைக்கு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அந்த வகையில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 50 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு சொந்தமாண காணிகளை ஹிங்குராணை சீனிதொழிற்சாலைத் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டது. அக்காணிகளையே முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அடையாளம் கண்டு இத்திட்டததினை இங்கு நிர்மாணிப்பதற்கு வழிவகுத்து கொடுத்தார். இத்திட்டத்தில் 500 வீடுகள், வைத்தியசாலை பாடசாலை, பள்ளிவாசல் சனசமுக நிலையம், போன்றவைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டு 3 வருடங்களாகி விட்டது. சகல நிர்மாணங்களும் பாழடைந்து நிர்மாணங்கள் மற்றும் வீடுகளும் இடிந்து விழும் அளவுக்கு தற்போது சேதமடைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் மருதமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி, ஒழுவில் பாலமுனை போன்ற பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்க காணியின்மையால் இத்திட்டம் அக்கரைப்பற்று- அம்பாறை வீதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
2011இல் சிகல உறுமய கட்சி இத்திட்டத்திற்கு எதிராகவும் இக்காணி தீகவாபி பிரதேசத்தை அண்டிய பிரதேசம். இதில் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்களை குடியேற்றும் திட்டத்தினை மறைந்த அஸ்ரப் முன்னெடுத்த திட்டத்தினை பேரியல் அஸ்ரபும் முன்னெடுக்கின்றார் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இத்திட்டத்தினை முஸ்லிம்களுக்கு மட்டும் பகிர்ந்தளிக்க முடியாமதென நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இத்திட்டத்தினை பகிர்ந்தளிக்கும்போது சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களை அம்பாறை மாவட்டத்தில் அடையாளம்கண்டு அரச சட்டமன்றம் ஊடாகவும் அம்பாறை அரச அதிபர் அக்கரைப்பற்று பிரதேச செயலாhள் பிரிவுகள் இணைந்து இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என தெரிவித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
அரசின் பங்காலிச் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர். அதுபோன்ற அமைச்சரவையில் அமைச்சர்கள் றவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுதீன், சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பசீர் சேகுதாவுத் உள்ளனர். இவர்கள் இதுவரையிலும் இந்த வீடமைப்புத் திட்டம் பற்றி ஜனாதிபதியிடமோ அல்லது தமது அமைச்சரவையிலோ கலந்து ஆலோசிக்கவும்மில்லை.
மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப், முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஆகியோர் செய்த அபிவிருத்திச் சேவைகளில் 5 சதவீதமேனும் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரதேசத்திற்கு கடந்த 3 வருடங்களாக எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தயட்ட கிருளைக்கு வரும் ஐனாதிபதியை அழைத்து இந்த வீட்டுத்திட்டத்தினை காண்பித்து ஆகக் குறைந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளை நிர்மாணித்து தரவிட்டாலும், சவூதி அரசின் தனவந்தர்கள் தமது வருடாந்த தர்ம நிதியினை சேகரித்து மனிதபிமான உதவித்திட்டத்தின் கீழ் அளித்த இந்த வீடுகளை பெற்றுத் தரும்படி சம்பந்தப்பட்டவர்களை கேட்கின்றனர்.
(அஸ்ரப் ஏ சமத்)