Published On: Friday, March 15, 2013
ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்: காத்தான்குடியில் சுவரொட்டிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி, பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக நடமாடும் பள்ளிவாசல், பாடசாலை, பஸ்தரிப்பிடம், வர்த்தக ஸ்தபானங்கள் ஆகியவற்றில் ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் என்ற பெயரில் பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம் எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம். புகைத்தல், மதுபானம் பாவிப்பதை தடை செய்தல், ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம், கடைகளில் புகைத்தல் பொருட்கள் விற்பதை தடை செய்யுங்கள், அல்லாஹ் உங்களுக்கு (பறக்கத்) அருள்புரிவானாக என்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)