எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 15, 2013

யாழ்ப்பாணத்தில் நடமாடும் நூலகம் அங்குரார்ப்பணம்

Print Friendly and PDF


கிரவுண்ட் வியூஸ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பவற்றின் கூட்டிணைப்போடு ஆசிய கலைக் காப்பகம் மற்றும் ரேக்கிங் லீவ்ஸ் என்பன இணைந்து நடத்திய திறந்த தொகுப்பு என்ற நடமாடும் நூலக அங்குரார்ப்பண வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை சுன்னாகம் கிறிஸ்தவ சேவ ஆச்சிரமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.


இதன்போது யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் இணைப்பாளர் தா.சனாதனன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். இங்கு அருந்தலானதும் தேடிப்பெற முடியாததுமான கலை தொடர்பான காட்சிக் கையேடுகள், பருவகால இதழ்கள் மற்றும் விபரணக் குறிப்புக்கள் என்பன 400 புத்தகங்கள் மேற்படி நடமாடும் நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள், கலை ஆர்வலர்கள் இதில் பங்கேற்றதை காண முடிந்தது. இந்த நடமாடும் நூலகமானது படைப்பாளிகள், மாணவர்கள் தொழிற் தகைமையாளர்கள் ஆசிரியர்கள் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


(பா.சிகான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2