எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 31, 2013

கிளிநொச்சியில் கூட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு அரசே முழுப்பொறுப்பு

Print Friendly and PDF


சிறிதரன் எம்.பி.யை இலக்கு வைத்து பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவு கூடுமே ஒளிய குறையாது' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

'வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவுள்ள நிலையில் இடம்பெற்ற இச்சம்பவமானது தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையாகவும் வாக்காளர்களையும் மற்றும் ஆதரவாளர்களையும் பயமுறுத்தும் செயல்.

சிறிதரன் எம்.பி.யை இலக்கு வைத்து பலமுறை தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவு கூடுமே ஒளிய குறையாது' என தெரிவித்தார். இவ்வாறான வன்முறைகளை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(குகதர்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2