Published On: Monday, March 25, 2013
யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியானுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்
யாழ். மாநகரசபை உறுப்பினரும் ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான பி.ஏ.எஸ் சுபியானுக்கு எதிராக யாழ். முஸ்லிம் பகுதிகள் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தனிநபர் மற்றும் யாழ். முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமையை விலியுறுத்தும் மூன்றாவது கண் எனும் பெயரிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ். முஸ்லிம்களே இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்கள், யாழ். முஸ்லிகளுக்கு தொல்லை கொடுக்காத காலமே கிடையாது, முஸ்லிம் வட்டாரத்தில் இடம்பெறும் எல்லா நல்ல காரியங்களையும் குழப்பும் ஒரே ஆற்றல் உடையவன் இவன் மட்டும்தான் போன்ற வாசங்கள் இந்த சுவரொட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சுயநல சுயேட்சை அரசியல்வாதி சுபியானின் முதலைக் கண்ணீர் என அந்த சுவரொட்டிகளுக்கு தலைங்கம் இடப்பட்டுள்ளது.
(பா.சிகான்)